செப்டம்பர் 01 2025 அன்று, அல்லது அதற்குப் பின்பு நிகழ்ந்த நிகழ்வுகள் தொடர்பான காப்பீட்டு உரிமைக்கோரல் ஆவணங்களை அருகில் உள்ள ஸ்ரீ லங்கா இன்ஷூரன்ஸ் கோபரேஷன் ஜெனரல் லிமிடெட் தலைமை அலுவலகம் அல்லது கிளை அலுவலகம் ஊடாக எமக்கு அனுப்பி வைக்கவும். தயவுசெய்து ஆவணங்களை பதிவேற்றுவதைத் தவிர்க்கவும்.
அனைத்து உரிமைக்கோரல் ஆவணங்களிலும் பின்வரும் விபரங்களுடன் பாடசாலை அதிபரின் சான்றளித்தலும் இருத்தல் அவசியமாகும். (அதிபரின் கையொப்பம், முத்திரையானது ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களை மறைக்கப்படாதவண்ணம் இருத்தல் வேண்டும்)
- அதிபரின் கையொப்பம்
- கையொப்பமிடப்பட்டத் திகதி
- அதிபரின் அதிகாரப்பூர்வ முத்திரை
உரிமைக்கோரல் சமர்ப்பிக்கும் காலம்
அனைத்து உரிமைக்கோரல் ஆவணங்களும் நிகழ்வு இடம் பெற்ற திகதியிலிருந்து 90 நாட்களுக்குள் ஸ்ரீ லங்கா இன்ஷுரன்ஸ் கோர்பரேஷன் ஜெனரல் லிமிடெட் தலைமை அல்லது கிளை அலுவலகத்தில் சமர்ப்பித்தல் வேண்டும்.
ஒப்பந்த காலத்திற்குரிய, நிலுவையில் உள்ள கோரிக்கைகளுக்கான அனைத்து மீள் சமர்ப்பிப்புகளும் மற்றும் அவ் ஒப்பந்தக்காலத்திற்குரிய உரிமைக்கோரல்களும், ஒப்பந்தக்கால முடிவிலிருந்து 90 நாட்களுக்குள் SLIC பொதுக் காப்புறுதி சுரக்ஷா பிரிவுக்கு சமர்ப்பிக்கப்படல் வேண்டும்.