அறிமுகம்

சுரக் ஷா

என்றென்றும் பாதுகாப்பு - நம் தேசத்தின் குழந்தைகளுக்கு

"சுரக் ஷா"என்பது அரச பாடசாலை, அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலை, விஷேட தேவையுடைய மாணவர்கள் கல்வி கற்கும் பாடசாலை மற்றும் பிரிவெனாவில் கல்வி கற்கும் அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் இலங்கை அரசினால் இலவசமாக வழங்கப்படுகின்ற மருத்துவ, திடீர் விபத்து மற்றும் பெற்றோரின் இழப்பு தொடர்பிலான அனுகூலங்களைக் கொண்ட காப்புறுதித் திட்டமாகும்






"சுரக்ஷா" என்பது அரச பாடசாலை, அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலை, விஷேட தேவையுடைய மாணவர்கள் கல்வி கற்கும் பாடசாலை மற்றும் பிரிவெனாவில் கல்வி கற்கும் அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் இலங்கை அரசினால் இலவசமாக வழங்கப்படுகின்ற மருத்துவ, திடீர் விபத்து மற்றும் பெற்றோரின் இழப்பு தொடர்பிலான அனுகூலங்களைக் கொண்ட காப்புறுதித் திட்டமாகும்.

இக் காப்புறுதித் திட்டத்தில் கீழ்வரும் பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்கள் உள்ளடக்கப்படுவார்கள்.
     அரச பாடசாலைகள்
     அரசினால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகள்
     விஷேட தேவையுடைய மாணவர்கள் கல்வி கற்கும் பாடசாலை
     பிரிவெனாக்கள்

  • 05 வயது தொடக்கம் 21 வயது வரை (மேலே குறிப்பிடப்பட்டுள்ள பாடசாலை மாணவர்களுக்கானது)
  • 04 வயது தொடக்கம் 21 வயது வரை (விஷேட தேவையுடைய மாணவர்கள் கல்வி கற்கும் பாடசாலைக்கானது)

  • 1ம் வருடம் – 01.07.2024 தொடக்கம் 30.06.2025 வரை
  • 2ம் வருடம் – 01.07.2025 தொடக்கம் 30.06.2026 வரை
  • 3ம் வருடம் – 01.07.2026 தொடக்கம் 30.06.2027 வரை

வைத்திய சிகிச்சைக்கான காப்பீடு ரூ. 300,000/-
அறைக்கான கட்டணம் - தனியார் வைத்தியசாலை ரூ. 12,500/-
நாளொன்றுக்கான கொடுப்பனவு - அரச வைத்தியசாலை ரூ. 1,000/-
தீவிர நோய் சிகிச்சை ரூ. 1,500,000/-
விஷேட வெளிநோயாளர் சிகிச்சைக்கான காப்பீடு ரூ. 20,000/-
பெற்றோர் இழப்பின் போது – ஒரு பெற்றோருக்கு ரூ. 75,000/-
தனிநபர் விபத்துக் காப்பீடு ரூ. 200,000/-

சிறப்பு குறிப்புகள் -

அனைத்து உரிமைக்கோரல் படிவம் உட்பட உரிமைகோரலுடன் தொடர்புடைய அனைத்து ஆவணங்களும் சுரக்ஷா இணையத்தளம் மூலம் சமர்ப்பிக்கப்பட வேண்டும். மேலதிகமாக ஏதேனும் தகவல் தேவையேற்படின், உரிமைக்கோரலுக்கான மேலதிக ஆவணங்களை கேட்பதற்குரிய உரிமை SLICGI நிறுவனத்திடம் உள்ளது.

அனைத்து உரிமைக்கோரல் ஆவணங்களிலும் பின்வரும் விபரங்களுடன் பாடசாலை அதிபரின் சான்றளித்தலும் இருத்தல் அவசியமாகும். (அதிபரின் கையொப்பம், முத்திரையானது ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களை மறைக்கப்படாதவண்ணம் இருத்தல் வேண்டும்)

உரிமைக்கோரல் சமர்ப்பிப்பு நடைமுறை குறித்த படிப்படியான வழிகாட்டி இங்கே